கடந்த சில தினங்களாக தொடர் மழையால் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளாரம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளமானது நிரம்பும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், அதன் நிலவரம் குறித்து இன்று (19.11.2020) நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன், குளத்தின் தன்மை, பாதுகாப்பு, கரையை பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக, அங்கிருந்த பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் உதவி செயற்பொறியாளருடன் ஆலோசனை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.அதனைத்தொடர்ந்து கரையை பலப்படுத்தும் பணி அங்கு உடனடியாக தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும், அதிமுக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான காந்தி (எ) காமாட்சி, வெள்ளாரம் ஊராட்சி மன்ற தலைவர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.