• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

  • Share on

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் இன்று (மாா்ச் 20) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படுகிறது.

இதனையடுத்து, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் தொடங்கியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை  வேட்பாளர் ஜெ.சிவநேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை கடத்திய இருவர் கைது - 4 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடியில் ஒரே நாளில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் தேர்தல் பிரச்சாரம்... சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

  • Share on