உடன்குடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள ஜே.ஜே நகரைச் சேர்ந்த சுயம்பு ஜோசப் மகன் ராஜ்குமார் (35). இவரது நண்பர் உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுதாகர் (36). இவர்கள் இருவரும் சேர்ந்து ஜே.ஜே நகர் ராஜ்குமார் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த செடிகளை அந்த பகுதி மக்கள் பார்த்ததால், இருவரும் செடிகளை வீட்டுக்குள் மறைத்து வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.