• vilasalnews@gmail.com

திருநெல்வேலி மக்களவை தொகுதியை குறிவைக்கும் 2 காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏக்கள்... யாருக்கு வாய்ப்பு?

  • Share on

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட இரண்டு காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் 9 தொகுதிகளும் , புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதி உள்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், திருள்ளூர் ( தனி ), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கிய திருச்சி, தேனி, ஆரணி தொகுதிகளுக்கு பதில் வேறு தொகுதிகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தென்மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் விருது நகரில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் சிட்டிங் எம்பி விஜய் வசந் ஆகிய இருவருக்குமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில், திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும் திருநெல்வேலி மாவட்டம் நாங்கநேரி தொகுதியின் எம்எல்ஏவுமான ரூபி மனோகரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவுமான ஊர்வசி அமிர்தராஜ் ஆகிய இருவருக்கும் இடையே திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவி வருவதாக உட்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

மக்களவை தேர்தலில் போட்டியிட தேவையான விட்டமின்கள் இவர்கள் இருவரிடம் மட்டுமே இருப்பதால், இவர்கள் இருவரில் ஒருவரை நிறுத்தினால் மட்டுமே திருநெல்வேலி எம்பி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்ற முடியும் என்கின்றனர் விவரம் அறிந்த உட்கட்சி நிர்வாகிகள்.

  • Share on

5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்பியை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் - திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு!

தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தொடர்பாக வதந்தி : மாவட்ட தலைவர் விளக்கம்!

  • Share on