தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டிருக்கிறார். அவரது வெற்றிக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை, தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் வரவேற்றார்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜுனன், ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலாளர் ஞானசேகர், மதிமுக மாநகரச் செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதஸ் பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள் தான் இருக்கிறது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்பியை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். நாம் வீடு வீடாக சென்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் திட்டங்கள், கனிமொழி எம்பி தொகுதிக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளை எடுத்துக் கூறி தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அவை தலைவர் செல்வராஜ், பொருளாளர் சுசி.ரவீந்திரன் மருத்துவர் அணி வடக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.