தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி டேஞ்சர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (14.03.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி மகன் வினோத்குமார் (எ) டேஞ்சர் வினோத் (39) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அவரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் வினோத்குமார் (எ) டேஞ்சர் வினோத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வினோத்குமார் (எ) டேஞ்சர் வினோத் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் என 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.