• vilasalnews@gmail.com

தமிழகத்தின் முக்கிய தீர்த்தக்கரையாகத் திகழும் சிப்பிகுளம் கடற்கரையில்... 20 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன்!

  • Share on

தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர்  தீர்த்தக்கரைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே சுமார்  5 கி.மீ. தொலைவில் உள்ள சிப்பிகுளம் கடற்கரை முக்கிய தீர்த்தக்கரையாகத் திகழ்கிறது. 

கீழவைப்பாறு ஊராட்சியில் உள்ள சிப்பிகுளம் கடற்கரை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த கடற்கரையாக காணப்படுகிறது. தென்தமிழகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடமாக புகழ் பெற்று  விளங்கிவருகிறது. இங்குள்ள கடற்கரைக்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை என   அமாவாசை நாட்களில் தூத்துக்குடி வடக்கு பகுதிகளான விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

சிப்பிகுளம் தீர்த்தக்கரையில் தங்களது  முன்னோர்களுக்கு எள், பூ, பழம், தேங்காய், புனிதநீர் உள்ளிட்ட பூஜை  பொருட்களை கொண்டு தர்ப்பணம் செய்து விட்டு கடலில் புனித நீராடி அருகிலுள்ள வைப்பாறு காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்..

மேலும் இப்பகுதி கிராமங்களில்  குடும்பத்தில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை முடித்து அஸ்தியை கரைப்பதற்கு குடும்பத்தோடு சிப்பிகுளம்  கடற்கரைக்கு சென்று பூஜைகள் செய்து அஸ்தியை கடலில் கரைக்கின்றனர்.  சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் திருவிழா காலங்களில் சாமியாடிகள் புனித  நீராடி செல்வதும் இங்குதான்.

இதுபோன்ற சிறப்பும், பழமையும் வாய்ந்த சிப்பிகுளம் கடற்கரையில் பெண்களுக்கு உடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் கோரிக்கை வைத்து, அதற்கான எதிர்பார்ப்பில் நீண்ட காலமாக காத்திருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அதை நிறைவேற்றும் விதமாக, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 20 லட்சம் மதிப்பீட்டில், சிப்பிகுளம் கடற்கரையில் பெண்களுக்கு உடை மாற்றும் அறைகள் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில், அதிமுகவை சேர்ந்த விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.  பொதுமக்களின் முக்கிய தேவையை நிறைவேற்றி தந்ததிற்கான விளாத்திகுளம் சுற்றுவட்டார பொதுமக்கள் அதிமுகவிற்கும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தங்களது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், கீழவைப்பார் ஊராட்சிமன்ற தலைவர் ரோஸ்மலர், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருசாமி, ஒப்பந்ததாரர் பரமசிவன் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கனிமொழிக்காக மேயர் ஜெகன் பெரியசாமி போடும் மாஸ்டர் பிளான்!

தூத்துக்குடியில் ரவுடி டேஞ்சர் வினோத் கைது!

  • Share on