• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே புதிய பேவர் பிளாக் சாலை : விளாத்திகுளம் யூனியன் சேர்மன் பூமி செய்து தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால்,  அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

எனவே, மீனாட்சிபுரம் கிராமத்தின் தெருக்களில் சாலை அமைத்து தரவேண்டும் என்று விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு, சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், செயற்பொறியாளர் செல்வ ஜோதி, ஜமீன் செங்கல்படை ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன், மீனாட்சிபுரம் அதிமுக நிர்வாகிகள் பாண்டி, கந்தன், மரகதவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி : நிறுவனத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை அறிமுகப்படுத்தினார்

கனிமொழிக்காக மேயர் ஜெகன் பெரியசாமி போடும் மாஸ்டர் பிளான்!

  • Share on