• vilasalnews@gmail.com

தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி : நிறுவனத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை அறிமுகப்படுத்தினார்

  • Share on

தூத்துக்குடியில் தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு மற்றும் கொடி அறிமுக விழா  நடைபெற்றது.

தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு மற்றும் கொடி அறிமுக நிகழ்ச்சி, தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு, மாநில அமைப்பு செயலாளர் வள்ளிநாயகம் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி தேவர் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கக் கட்டி ஜெகன் சுவி சேசராஜ் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக கீதா மாரியப்பன் பாபாஜி, ஓம் சக்தி சங்கர், தமிழ்ச்செல்வன், பொன் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேசிய நிறுவன தலைவர் ஆறுமுகம் பிள்ளை கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார்.

  • Share on

தூத்துக்குடி அந்தோணியார் கோயில் பகுதியில் மாணவனை கடத்த முயற்சி நடந்ததா? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

விளாத்திகுளம் அருகே புதிய பேவர் பிளாக் சாலை : விளாத்திகுளம் யூனியன் சேர்மன் பூமி செய்து தொடங்கி வைத்தார்!

  • Share on