தூத்துக்குடி அந்தோணியார் கோயில் பகுதியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு 16 வினாடி வீடியோவுடன் ஆடியோவும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
இதை பொதுமக்கள் யாரும் நம்பவும் வேண்டாம், யாருக்கும் பகிரவும் வேண்டாம் செய்தியின் உண்மை தன்மை அறியாமல் பகிர்ந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி அந்தோணியார் கோயில் கிட்ட நடந்தது இன்றைக்கு” என ஒரு 16 வினாடி வீடியோவும், அதோடு பெலிக்ஸ் என்று பேசுகிறேன் என்ற 52 வினாடி ஆடியோவுடன் 9வது வகுப்பு மாணவனை வடமாநிலத்தவர்கள் கடத்த முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவையும், ஆடியோவையும் பொதுமக்கள் நன்கு கவனித்தால் தெரியும், ஆடியோவில் ‘திருச்சி அந்தோணியார் ஸ்கூலில் படிக்கும் 9வது வகுப்பு மாணவன் என்று சொல்லப்படுகிறது, அதே போன்று வீடியோவில் உள்ள இரு சக்கர வாகன எண் திருச்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்தது என்பதும் தெரியும், இதைத் திரித்து தூத்துக்குடி அந்தோணியார் கோயில் கிட்ட நடந்தது என குறிப்பிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில் மாணவன் கடத்த முயற்சி நடந்ததற்கான எந்த தகவலும் அதில் இல்லை. இது வதந்தி என்பது தெரியும், ஆகவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. இதை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் அழித்து (delete) விடவேண்டும். மேலும் இந்த வீடியோ மற்றும் ஆடியோவை தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.