தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியினை, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்பொருட்டும் இன்று சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, வட்டாட்சியர் பிரபாகரன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.