• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 8 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைப்பணிகள் - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 128 புதிய சாலைப்பணிகள் மற்றும் டி.சவேரியார்புரத்தில் புதிய நியாயவிலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அருகே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் முழுமையாக சேதமடைந்தன. பாதிக் கப்பட்ட 128 சாலைகளை சீரமைத்து, புதிய சாலைகள் அமைக்க முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் 8 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.

இதையடுத்து, மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 128 புதிய சாலைகள் அமைக்கும் பணியை சண்முகையா எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். இதில் 68 தார் சாலைகளும், 60 பேவர் பிளாக் சாலைகளும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி பிடிஓ மாணிக்கவாசகம், உதவி செயற்பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சிவக்குமார், தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக் கியமேரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெசிந்தா, கிளை செயலாளர்கள் பொன்னுச்சாமி, அம்புரோஸ், சந்திரசேகர், வேல்ராஜ். வடிவேல், மகாராஜா, மாரியப்பன், காசி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதி ராஜா, ஸ்டாலின், ராணி, சக்திவேல், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் மைக்கேல் ராஜ், ஊர் தலைவர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய நியாயவிலை கடை திறப்பு


மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நடத் தப்படும் டி.சவேரியார்புரம் நியாயவிலை கடைக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 14 லட்சத்தில் புதிய கடை கட்டப்பட்டுள்ளது. இதனை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.

இந்த திறப்பு விழாவில், தூத்துக்குடி கூட்டுறவு சார் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அந்தோணிபட்டுராஜ் முன்னிலை வகித்தார். விற்பனையாளர் பெருமாள், ராணி, சில்வஸ்டார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மற்றும் சங்க செயலாட்சியர் சாம் டேனியல் ராஜ், சங்க செயலாளர் பாலமுருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

  • Share on

புதிரை வண்ணார் சமுதாய மக்கள் குறித்து கணக்கெடுப்பு : ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர்கள் குழு அலுவலகம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

  • Share on