தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளராக திருச்சிற்றம்பலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கதிர்வேல் நகர் பாரதி நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் பி.திருச்சிற்றம்பலம். தூத்துக்குடி 39வது வார்டு அதிமுக செயலாளராக பணியாற்றி வந்தார். பின்னர், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பணியாற்றினார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளராக திருச்சிற்றம்பலம் நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதனுக்கு சால்வை அனைத்து வாழ்த்துக்கள் பெற்றார். ஜெ.பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சிற்றம்பலத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.