• vilasalnews@gmail.com

முத்தையாபுரத்தில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் - 2 பேர் கைது

  • Share on

முத்தையாபுரம் பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா  மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று (06.03.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, 

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் வடக்கு தெரு பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்ளை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான சின்னதுரை மகன் மகாராஜா (19) மற்றும் இருளாண்டி மகன் கார்த்திகேயன் (19) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் மகாராஜா மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மகாராஜா மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், கார்த்திகேயன் மீது திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

எட்டையாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு 3 வருடம் சிறைதண்டனை!

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக களம் இறங்கும் பிரபல பெண் வேட்பாளர்?

  • Share on