• vilasalnews@gmail.com

எட்டையாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு 3 வருடம் சிறைதண்டனை!

  • Share on

எட்டையாபுரம் அருகே போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 3 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் எட்டையாபுரம் வடக்கு ஆறுமுகமுதலியார் தெருவைச் சேர்ந்த சின்னராமசாமி மகன் வேல்முருகன் (57) என்பவரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா புலன் விசாரணை செய்து கடந்த 04.08.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 05.03.2024 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன்,  குற்றவாளியான வேல்முருகன் என்பவருக்கு 3  வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் சங்கரகோமதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு 3 வருடம் சிறைதண்டனை!

முத்தையாபுரத்தில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் - 2 பேர் கைது

  • Share on