• vilasalnews@gmail.com

தேர்தல் பத்திரம்.. பாஜகவை பாதுகாக்கும் பாரத ஸ்டேட் வங்கி... கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ்

  • Share on

பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்டியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரத ஸ்டேட் வங்கியை பாஜக தன் கைப்பாவையாக பயன்படுத்தி இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியதின் அடிப்படையில்,

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு, மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன்சில்வா, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் மஜீத், இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் , முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவர் முத்து விஜயா, மாவட்ட பொது செயலாளர்கள் மிக்கேல், சாந்திமேரி, மாவட்ட துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், சீனிவாசன், மைக்கில் பிரபாகர்,  சின்னகாளை, ஜெயஜோதி, மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி குமார முருகேசன் ,  ஜான்சன், கதிர்வேல், இஸ்தோர்மஸ்கர்னாஸ், முத்துபாண்டி, வார்டு தலைவர்கள் கனகராஜ், அருண், கமலேஷ்  ,மகேந்திரன், மகாலிங்கம், ராஜா,  பெனடிக்ட், அந்தோணி சாமி, வெள்ளையன், ரகுநாதன், மாரியப்பன், சுப்பிரமணியன், கிருஷ்ணன், ஆரோக்கியம், மணி, சித்திரை பால்ராஜ், சரஸ்வதி நாதன்,  மகாராஜன், ஜோபாய் பச்சேக், சுரேஷ், தாமஸ், உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!!

விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு 3 வருடம் சிறைதண்டனை!

  • Share on