• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வாலிபர் கழுத்தறுத்து கொடூர கொலை!!

  • Share on

உவரி அருகே தூத்துக்குடி வாலிபர் கழுத்தறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கில்டஸ் மகன் ஜஸ்டின் (23). இவர், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கப்பல் பயிற்சி கல்லூரியில் சேர்ந்துள்ளார். 4 ஆம் தேதி வகுப்புகள் தொடங்க இருந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி அவர் திசையன்விளைக்கு புறப்பட்டுச் சென்றார். 

இந்நிலையில், நவ்வலடி கோடாவிளை கடற்கரை கிராமத்தில் உள்ள மஸ்தான் பள்ளிவாசல் அருகே அவர் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள அவரது உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • Share on

தூத்துக்குடியில் 30 வழக்குகள் உள்ள ரவுடி கைது

தூத்துக்குடி சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா : மார்ச் 8ம் தேதி தொடங்கி விடிய விடிய நடைபெறும்!

  • Share on