• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கவனம் ஈர்த்த திமுகவின் " மோடி சுட்ட வடை " நூதன பிரச்சாரம்!

  • Share on

பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, தூத்துக்குடி திமுக வினர் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான டிஆர்பி. ராஜா அறிவுறுத்தலின் படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள் ஆலோசனையின் பேரில்,

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு நேற்று (04.03.2024) மாலை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் வாயால் வடை சுட்டு மக்களை  மோடி வஞ்சிப்பதாக கூறியும், அதனை அம்பலப்படுத்தும் வண்ணமாகவும், துண்டு பிரசுரங்கள் மற்றும் மோடி சுட்ட வடைகள் என பயணிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக வடைகள் விநியோகம் செய்யப்பட்டு தூத்துக்குடி திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரச்சாரமானது, திமுக வட்ட செயலாளர் கதிரேசன், வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் ஆகியோர் தலைமையில், மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகரப் பிரதிநிதி தயாள சுந்தர், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், வட்டச் செயலாளர்கள் கங்கா ராஜேஷ், பாலு, மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, மகளிரணியைச் சேர்ந்த ரேவதி, வட்ட பிரதிநிதி சரவணன், அண்ணா நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் மார்க்கின் ராபர்ட், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் துரை, சண்முகபுரம் பகுதி ஒருங்கிணைப்பாளர்  மனோ ராஜ், பிரையன்ட் நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனிஸ்வரன், வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்பன், உமா மகேஷ், செம்புலிங்கம், பரத், சக்தி, ரஞ்சித்,  சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

7 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் 82 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் 30 வழக்குகள் உள்ள ரவுடி கைது

  • Share on