• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நிஷா பவுண்டேஷன் குடி போதை மற்றும் மன நல மறுவாழ்வு மையம் - மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி கால்டுவெல் காலனியில், நிஷா பவுண்டேஷன் குடி,போதை மற்றும் மன நல மறுவாழ்வு மையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி முதல் தெருவில் நிஷா பவுண்டேஷன் சார்பில் குடி, போதை மற்றும் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்தார்.

இதில், தமிழ்நாடு ஐஎன்டியுசி துணை தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை - போதை நோய் நற்பணி குழு இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முடிவில் நிஷா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் முகமதுஷானவாஸ் அஜித்  நன்றி தெரிவித்தார்.

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

தூத்துக்குடியில் இளைஞரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் : போலீசார் விசாரணை!

  • Share on