• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாளால் வெட்டு - கணவன் கைது!

  • Share on

Lதூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி மாரீஸ்வரி (25). இவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரேம்குமார் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை மாரீஸ்வரி கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் மாரீஸ்வரியை தாக்கி உள்ளார். 

இதனை தடுக்க முயன்ற அந்த பகுதியை சேர்ந்த முனீஸ்வரன், நாகூர்கனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் காயம் அடைந்த மாரீஸ்வரி உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி மணல், கல் கடத்தல் - உரிமையாளர், ஓட்டுநர் மீது வழக்கு பதிவு....லாரி பறிமுதல்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

  • Share on