• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் கோலம்போட நீங்க ரெடியா... அதிமுக சார்பில் பரிசு மழை காத்திருக்கு!

  • Share on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எட்டையபுரம் அதிமுக சார்பில் மார்ச் 3ம் தேதி கோலப்போட்டி நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம், எட்டையபுரம் அதிமுக சார்பில், நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் நாளை மறுநாள் ( மார்ச் 3 ) ஞாயிற்றுக்கிழமை, எட்டையபுரம் பட்டத்துவிநாயகர் கோவில் அருகில் வைத்து மாலை 3 மணிமுதல் 6 வரை வரை மெகா கோலப்போட்டி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு எல்இடி டிவி, வெள்ளி கொலுசு, கிரைண்டர், மின்சார அடுப்பு, ஏர் கூலர், ஸ்மாட் வாட்ச், பெண்களுக்கான கை பை, மேக்அப் செட், பட்டுச்சேலை, ஆறுதல் பரிசாக 100 பெண்களுக்கு குடம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

  • Share on

முத்துலாபுரம் பாலத்தின் அடியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்!

விளாத்திகுளம் பெண் மீது மிளகாய்பொடி தூவி செல்போன் பறிப்பு : வாலிபர் கைது!

  • Share on