• vilasalnews@gmail.com

முத்துலாபுரம் பாலத்தின் அடியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்!

  • Share on

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்துலாபுரம் பாலத்தின் அடியில் இறந்துகிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

விளாத்திகுளம் உட்கோட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்துலாபுரம் பாலத்தின் அடியில் நேற்று (29.02.2024) சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துது. மேற்படி பிரேதம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த நபர்,  புளு கலர்  SKC என்று எழுதப்பட்ட ஜட்டி டைப் டிரவுசர் அணிந்திருந்தார். மேலும் இடுப்பில் கருப்பு கலர் அரைஞாண் கயிறு ஆகியவற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே மேற்படி இறந்த நபரை பற்றி பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உனடியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எண். 04638-233498, மாசார்பட்டி காவல் நிலைய எண். 94981-01856 மற்றும் மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலக எண்களான 0461-2340650, 2340651, 2340700 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

எட்டையபுரத்தில் கோலம்போட நீங்க ரெடியா... அதிமுக சார்பில் பரிசு மழை காத்திருக்கு!

  • Share on