• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், வேதாந்தா நிறுவனத்தால் 11 இடங்களில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகள் கவலைக்குரியவை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்திருந்த நிலையில், ஆலையை திறக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், வேதாந்தா நிறுவனத்தால் 11 இடங்களில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகள் கவலைக்குரியவை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் ஒளிர்ந்த செல்போன்கள்... மகிழ்ச்சியில் மோடி!

முத்துலாபுரம் பாலத்தின் அடியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்!

  • Share on