• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஒளிர்ந்த செல்போன்கள்... மகிழ்ச்சியில் மோடி!

  • Share on

உங்கள் கொண்டாட்டமும், உற்சாகமும் நாடு முழுவதும் பரவ மொபைல் டார்ச் அடிக்க வேண்டும் என்று மோடி கூறிய உடன் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் செல்போன் டார்ச் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடியில் நேற்று ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியா முழுவதும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவில் தமிழகம் முக்கிய பங்கு வைத்து வருகிறது.

புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களின் சேவகனாக கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில் தலைசிறந்து விளங்குகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது; உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிந்தார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பலமடங்காக திருப்பித் தருவேன்.

தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்று அக்கறையோடு இருப்பேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன் என்று சொன்ன உடன் பாஜக தொண்டர்கள் மோடி.. மோடி என்று உற்சாக குரல் எழுப்பினர். அப்போது பிரதமர் மோடி.. உங்கள் கொண்டாட்டமும், உற்சாகமும் நாடு முழுவதும் பரவ மொபைல் டார்ச் அடிக்க வேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட பாஜக தொண்டர்கள் செல்போன் டார்ச் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

  • Share on

விளம்பரத்தில் சீன ராக்கெட் சர்ச்சை விவகாரம்... என்ன சொல்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

  • Share on