• vilasalnews@gmail.com

தென் மாவட்டங்களில் திமுகவிற்கு ஜீரோ... பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

  • Share on

தென் மாவட்டங்களில் களம் மாறிவிட்டது. திராவிட கட்சிகளுக்கு மதுரைக்கு கீழ் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை செல்ல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். அவருக்கு தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சீனா கொடி போட்டால் என்ன தப்பு என்று கேட்கிறார் கனிமொழி. அவரது பேச்சு அழகல்ல. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் அரசாக இந்த அரசு ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது. 

திமுக கூட்டணி கட்சியை நம்பி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலைமை அவர்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய சில கட்சிகளே கூட்டணிக்கு வர தயாராக இல்லை. கேட்கிற சீட்டை கொடுக்கவில்லை என்று அடம்பிடிக்கின்றனர்.

திமுக கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலில் நின்று இருக்கிறதா? இவ்வளவு பேசும் கனிமொழி திமுகவை தனியாக தேர்தலில் நிற்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. தென் மாவட்டங்களில் களம் மாறிவிட்டது. திராவிட கட்சிகளுக்கு மதுரைக்கு கீழ் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது. இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  • Share on

குளத்தூரில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

விளம்பரத்தில் சீன ராக்கெட் சர்ச்சை விவகாரம்... என்ன சொல்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

  • Share on