• vilasalnews@gmail.com

குளத்தூரில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

  • Share on

ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மிக்கேல் நவமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை!

தென் மாவட்டங்களில் திமுகவிற்கு ஜீரோ... பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

  • Share on