சோழபுரம் - புங்கவர்நத்தம் இடையேயான பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஊராட்சி ஒன்றியம், சோழபுரத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில், சோழபுரம் - புங்கவர்நத்தம் இடையேயான பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில், உதவி பொறியாளர் பிரேம்குமார், கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், புங்கவர்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, சோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணிசாமி, புங்கவர்நத்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வைர ஜெயந்தி நடராஜன், கிளைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், தேரிச்சாமி, ரகுபதி, திமுக கட்சி பேச்சாளர் தமிழ் பிரியன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.