ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் 33 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமத்தில், வருகிற மார்ச் 8, 9ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள், செல்வ விநாயகர், பால விநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்க ஈஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவன், காலபைரவர், ஜலதுர்க்கை, நவக்கிரகங்கள், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோட்டையில் அமைந்துள்ள வேத நாராயணர், உத்தண்டராய சுவாமி, ஜெகவீர மொட்டைய சாமி, இருளப்பசாமி, கருப்பசாமி, பத்திரகாளி, பேச்சியம்மன், மாரியம்மன், லாட சன்னிகர், வைரவன் ஜெகவீர சக்கதேவிக்கும் மகாசிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ஜெகவீர மொட்டைய சாமி ஆலயக்குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.