• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மனித நேய மக்கள் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • Share on

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி ஜாகிர் உசேன் நகரில் மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொது செயலாளர் முகமது பாசில் கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்ப வலியுறுத்தியும், கேஸ் சிலிண்டர் , பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், தேர்தலில் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த கோரியும், கோஷங்கள் எழுப்பபட்டது.

ஆர்ப்பாட்டத்தில், மாநகர செயலாளர் அப்துல் காதர், சமம் குடிமக்கள் இயக்கம் ஜாண் பி.ராயர்,புரட்சிகர இளைஞர் அணி பொறுப்பாளர் சுஜித், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

எப்போதும் வென்றான் கிராமத்தில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் விழா : விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

  • Share on