ஓட்டப்பிடாரம் அருகே மேல அரசடி இசிஆர் சந்திப்பு அருகே பழுதாகி நின்ற டேங்கர் லாரி மீது இருசக்க வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன் பாலமுருகன் ( 22 ) மற்றும் ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் தொகுதி சேர்ந்த ஆண்டன் என்பவரது மகன் ஆஷிக் ( 21 ). இவர்கள் இருவரும் நேற்று இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடி சென்று விட்டு வீட்டுக்கு மாலை வேளையில் திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மேல அரசரடி இ.சி.ஆர் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அங்கு சாலையோரம் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானர்.
இந்த விபத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த ஆசிக் பலத்த காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.