ஒட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் நாளை நடைபெற உள்ள வீரர் சுந்தரலிங்கனார் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த 11.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, "ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கவர்னகிரி ஊராட்சியில் வீரர் சுந்தரலிங்கம் நகரில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு கற்சிலையை மாற்றி முழு உருவ வெண்கல சிலை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருந்தார்".
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் மூலமாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு, நாளை ( 27.02.2024 ) திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வீரர் சுந்தரலிங்கனார் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா ஏற்பாடுகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கனகரத்தினம், சுகுமார், சித்ராதேவி, சண்முகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், தேன்மொழி, சுடலைமணி, ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளைச் செயலாளர் கோமதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.