விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாள், நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் அதிமுக கட்சி கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை செயலாளர் என்.கே.வரதராஜ பெருமாள், மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அதிமுக கழக இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, வார்டு கவுன்சிலர் பிரியா, மகளிர் அணி சாந்தி, விளாத்திகுளம் அண்ணா தொழிற்சங்க செயலாளார் கண்ணன், இணைச்செயலாளர் அய்யம்பாண்டி, துணைச் செயலாளர் பால்ராஜ், துணைத் தலைவர் பாலமுருகன், சண்முகராஜ், இணைச் செயலாளர்கள் வெள்ளைச்சாமி, கருப்பசாமி, பிச்சை மாரியப்பன், ராமநாதன் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.