மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சகாப்தமாகவும் திகழ்ந்தவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா. அவரின் 76 வது பிறந்தநாள் இன்று. இதனையடுத்து, அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு ஆலோசனையின்படி,
எட்டையபுரம் பட்டது விநாயகர் கோயில் அருகில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மகளிர் அணி செல்வி, சாந்தி, நகர அவைத் தலைவர் சேனா கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சின்னத்துரை, சிவா என்கிற சிவசங்கர பாண்டியன், சொக்கன், ஜஸ் முனியசாமி, அம்மா மடம் முருகன், மாவட்ட பிரதநிதி வேலுச்சாமி, கார்த்தி, மோகன், முனியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.