தூத்துக்குடியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, வர்த்தக அணி சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் ஆணைக்கிணங்க,
அதிமுக மாநில வர்த்தக அணி சார்பாக, தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே, பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கினார்.
இதில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.