• vilasalnews@gmail.com

புதியம்புத்தூர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி - சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!

  • Share on

புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி.சண்முகையா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் முன்னிலையில் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகளிடம் சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பள்ளிக்கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார். உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத, திருட முடியாத சொத்து உங்களுடைய கல்வி மட்டும்தான் என நமது முதலமைச்சர் கூறியுள்ளார். ஆகவே மாணவர்கள் சிறப்பாக படித்து உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கி வரும் முதலமைச்சர், மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாதம் ரூபாய் 1000 வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே மாணவ மாணவிகள் இத்திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி, தலைமை ஆசிரியர் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், கனகரத்தினம் சுகுமார், மாவட்ட திமுக பிரதிநிதி ஜோசப் மோகன், நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து,  புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் சற்குண பாண்டி, பூவலிங்கம், ராஜாவின் கோவில் ஜெயமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடு பணிகள் : அமைச்சர்கள் ஆய்வு!

தூத்துக்குடிக்கு இப்படியும் ஒரு பெருமை இருக்கா... சட்டமன்றத்தில் அமைச்சர் பெருமிதம்!

  • Share on