• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடு பணிகள் : அமைச்சர்கள் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவையொட்டி நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை வந்து சிப்காட் வளாக பர்னிச்சர் பார்க் அருகே அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும், சூசைபாண்டியபுரம் மங்களகிரி விலக்கு அருகே நலதிட்ட உதவிகள் வழங்க உள்ளார். 

இதனை முன்னிட்டு, விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

அப்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்தசேகரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், திமுக நிர்வாகிகள் உமரி சங்கர், கே.பி. ராஜா ஸ்டாலின், வழக்கறிஞர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம்

புதியம்புத்தூர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி - சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!

  • Share on