எப்போதும் வென்றான் கிராமத்தில், எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில் நடத்தப்பட்ட கபாடி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இவ்விழாவில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் போடுசாமி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ராதா, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்வி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கிளைக் கழகச் செயலாளர் முத்துராஜ், எம்.ஜி.ஆர் இளைஞரணி எஸ்.எஸ்.வீரபாண்டி,
மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பரமசிவன், கிளை கழகச் செயலாளர் ஆறுமுகம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலாளர் கண்ணன் என்ற சுப்புராஜ், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் முத்துமாரியப்பன், தங்க மாரியப்பன், இளம்பெண்கள் பாசறை நவநீதா , மகளிரணி சாந்தி, தர்மர், முருகன், செந்தில், எப்போதும் வென்றான் கூட்டுறவு சங்க தலைவர் திருநாவுகரசு,
அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாணவரணி ஒன்றியச் செயலாளர் ராமநாதன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கபாடி வீரர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மாணவரணி இணைச்செயலாளர் ராஜகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் செய்திருந்தார்.