துக்குடி மாவட்டம் ஏரல் சூலை வாய்க்கால் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சூலைவாய்க்கால் பகுதியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் சார்பில் புதிதாக நிறுவப்பட்ட 10 சி.சி.டி.வி கேமராக்களை இன்று (18.11.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஊராட்சி மன்ற தலைவர் வேங்கையன், ஊர் தலைவர் சூசையப்பர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் , ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்.