• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம்

  • Share on

தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில், ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் சுமதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட குடும்பநலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நவீன தழும்பில்லா ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில், அதிக அளவில் ஆண்கள் குடும்ப நல சிகிச்சைகள் நடைபெறும் வகையிலும், ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த முகாம் கோவில்பட்டி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு சிகிச்சை முடிந்ததும் ஈட்டுத் தொகை ரூ.1100-ம், சிகிச்சைக்கு அழைத்து வருகிறவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.200-ம் வழங்கப்படும். இந்த குடும்ப நல சிகிச்சை பாதுகாப்பானது. எந்த வித தையலும் இன்றி 10 நிமிடத்தில் முடிந்து விடும்.

இந்த முகாம் தொடர்பான விவரங்களுக்கு 98650 49048, 88075 17624 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடு பணிகள் : அமைச்சர்கள் ஆய்வு!

  • Share on