• vilasalnews@gmail.com

சட்டவிரோதமாக பீடி இலை கடத்தல்... தூத்துக்குடி மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை!

  • Share on

இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், கூந்தங்குழி கடற் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சுமார் 2 டன் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டு, தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்ற பைபர் படகை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் பிடி இலை கடத்திய மீனவர்களிடம் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி மற்றும் லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த காட்வே, சிலுவைப் பட்டியை சேர்ந்த டிஜோ ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக, இலங்கை கடற்படையினர் சட்டவிரோத பீடி இலை கடத்தலில் ஈடுபட்ட மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

  • Share on

ஸ்ரீவைகுண்டத்தில் நாளை ( பிப்.,21 ) ஒரு நாள் தங்குகிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!

ஒரே மேடையில் மீண்டும் பிரதமர் மோடி - மு.க ஸ்டாலின்.. தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்பு

  • Share on