• vilasalnews@gmail.com

அவதூறான தகவல்களை பரப்பி, பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் - அனுக்கிரஹா மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் புகார்

  • Share on

அனுக்கிரஹா தொண்டு நிறுவனம் மீது அவதூறு பரப்புவதாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக இடைச்சிவிளையை சேர்ந்த அனுக்கிரஹா மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனுக்கிரஹா தொண்டு  நிறுவனம் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிருந்து கடன் பெற்று எளிய தவனை முறைகளில் பணத்தினை திருப்பி செலுத்தி வருகிறோம். அனுக்கிரஹா தொண்டு நிறுவனமானது ஏழை எளிய மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திடவும், சுகாதாரம், கல்வி, மருத்துவம், ஏழை பெண்களின் திருமண உதவி என்று பல்வேறு உதவிகளை செய்து மத்திய மாநில அரசுகளிடமிருந்து பல விருதுகளை பெற்றுள்ளது. 

எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்பட்ட கந்து வட்டி கும்பல் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோர்களை பயன்படுத்தி இவர்களுடன் இணைந்து எங்கள் தொண்டு நிறுவனம் மீது வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான வதந்திகளை சுவரொட்டி மூலமாகவும், சமூக இணையதளம் மூலமாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 

மேற்படி நபர்கள் இதன் மூலம் பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி எங்கள் தொண்டு நிறுவனத்தை மிரட்டி பணம் பறிப்பதற்காக சட்ட விரோதமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுக்கிரஹா தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாக, மீனவர் பாதுகாப்பு பேரவை மற்றும் உவரியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜன் உள்ளிட்டோரும் மனு அளித்துள்ளர்.

  • Share on

எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக கோரிக்கை

ஸ்ரீவைகுண்டத்தில் நாளை ( பிப்.,21 ) ஒரு நாள் தங்குகிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!

  • Share on