• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளரின் அரசியல் எழுச்சி மாநாடு - கனிமொழி எம்பி பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பில் தேவேந்திர குல வேளாளரின் அரசியல் எழுச்சி மாநாடாடு, தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகள் காந்தி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய இராணுவ வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவரும், ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆகச்சிறந்த போராளியுமான தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு, அவர் பிறந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டபாலம் ரவுண்டானாவில் முழு உருவ வெண்கல சிலையை தமிழக அரசு உடனடியாக அமைத்து தர வேண்டும்.

உலகம் முழுவதும் வாழுகின்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை திட்டமிட்டு சூழ்ச்சியில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் அடைத்து பிறப்பால் உயர்ந்த விவசாய குடியான தேவேந்திர குல மக்களை தாழ்த்தப்பட்டோர் என்றும், ஆதிதிராவிடர் என்றும், SC என்றும் ஒரு அட்டவணையில் அடைத்து வருவதை ஏற்க முடியாது. எனவே வரலாற்று ஆவணங்களின் மூலமாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் SC இல்லை என்றும், பாண்டியர்களின் வழியில் வந்தவர்கள் என்றும் வரலாற்று ஆவணங்களின் வாயிலாக நிரூபணம் செய்யப்படுகிறது. எனவே இந்த சமூகத்தை 10.5% இட ஒதுக்கட்டுடன் SC படியலில் இருந்து வெளியேற்றிட இதர பட்டியலில் வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலையில் தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே தமிழக அரசு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அனைத்து சிறைவாசிகளையும் நன்னடத்தை அடிப்படையில் முன் விடுதலை செய்ய வேண்டும். குறிப்பாக 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டணை அனுபவித்து வருகின்ற அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை விமான நிலையத்திற்கு பொதுநலன் கருதி தங்கள் நிலங்களை அரசிற்கு வழங்கிய தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனாரின் பெயர் வைக்க வேண்டும்.

சமூகத்தை சீரழித்து வருகின்ற மதுபழக்கத்தை முற்றாக துடைத்தெறிகின்ற வகையில் அனைத்து டாஸ்மார்க் கடைகளையும்,மதுபான தயாரிப்பு ஆலைகளையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் பாராளுமன்ற உறுப்பினரை இந்த மாநாடு பாராட்டுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கு ஆணைப்பிறப்பித்த தமிழக அரசிற்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது மற்றும் தமிழ்நாட்டில் நல்லாட்சி செய்து வரும் தமிழக அரசை இந்த மாநாடு பாராட்டுகிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

  • Share on

ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட புதிய பாலம் அமைக்கும் பணி - விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!

எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக கோரிக்கை

  • Share on