• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற திமுகவினர்!

  • Share on

தூத்துக்குடி வழியாக நெல்லைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் வைத்து திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சாலை மார்க்கமாக நெல்லைக்கு சென்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை, தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் வைத்து, வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரமேஷ் உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தந்தைக்கும் நீதி கிடைத்தது... மகனும் நீதிபதியானார் - சாதித்து காட்டிய படுகொலையான முறப்பநாடு விஏஓ-வின் மகன்!

ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட புதிய பாலம் அமைக்கும் பணி - விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!

  • Share on