• vilasalnews@gmail.com

தந்தைக்கும் நீதி கிடைத்தது... மகனும் நீதிபதியானார் - சாதித்து காட்டிய படுகொலையான முறப்பநாடு விஏஓ-வின் மகன்!

  • Share on

தனது தந்தை கொலை செய்யப்பட்ட சோகத்தில் இருந்து வந்த நிலையில், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன் மார்ஷல் ஏசுவடியான்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் சேவியர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். இக்கொலை குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை உடனடியாக கைதுசெய்யப்பட்டு, 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, கொலை நடந்த 143 வது நாளான 15.09.2023 அன்று மேற்படி குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற  நீதிபதி செல்வம் அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேற்படி இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வு அறிவித்தது, இதில் விண்ணப்பித்த மேற்படி கொலையுண்ட லூர்து பிரான்சிஸ் சேவியர் மகன்  மார்ஷல் ஏசுவடியான், தனது தந்தை கொலை செய்யப்பட்ட சோகத்தில் இருந்து வந்த நிலையில், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மார்ஷல் ஏசுவடியானை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூசைபாண்டியாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, அவரது பணி சிறக்கவும், மென்மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற வேண்டுமென பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

அவருடன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அனில் மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் ஆகியோரும் வாழ்த்தினர்.

  • Share on

தூத்துக்குடியில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டடம் திறப்பு!

தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற திமுகவினர்!

  • Share on