• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டடம் திறப்பு!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாக வணிகவரித்துறையின் சார்பில் தூத்துக்குடியில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக வணிகவரித்துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடத்தில்,  தரைதளத்தில் உதவி வணிகவரி அலுவலகம் 1 & 2ல் வணிகவரி அலுவலர் அறை, துணை வணிகவரி அலுவலர் அறை, உதவி வணிகவரி அலுவலர் அறை, அலுவலக அறை, உணவு அருந்தும் அறை, கணினி அறை ஆவண காப்பக அறை பதிவு வைப்பறை, ஓட்டுநர் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் உதவி வணிகவரி அலுவலகம் (Enforcement) மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் அறை, வணிகவரி அலுவலர்(Group-2) அறை, உதவி வணிகவரி அலுவலகம் (Enforcement) அறை துணை வணி அலுவலர் (Group-1) அறை, வணிகவரி அலுவலர் (Audit) அறை, உதவி வணிகவரி அலுவலர் அறை, புள்ளியியல் ஆய்வாளர் அறை, மேலாளர் அறை, அலுவலர் அறை எழுதுபொருள் அறை, உணவு அருந்தும் அறை, கனிணி அறை, ஆவண காப்பக அறை, பதிவு வைப்பறை, ஆடவர்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தளத்தில் துணை ஆணையர் அலுவலகத்தில் வணிக வரி அலுவலர் (Group-1) (Squard) gear also apost (Group-2) அறை, துணை வணிகவரி அலுவலர் (Squard) அறை, ஆவண காப்பக அறை, பதிவு வைப்பறை Pantry, 100 நபர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இக்கட்டிடத்தில் துணை ஆணையர் அலுவலகம் உதவி ஆணையர் 1, அலுவலகம் உதவி ஆணையர் 2, அலுவலகம், உதவி ஆணையர் 3 அலுவலகம் மற்றும் உதவி இயக்குநர் செயலாக்க அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் அமைத்து இயங்கும் வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில், வணிகவரித்துறை துணை ஆணையாளர் கவிதா, இணை ஆணையர்  சுகந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வி, உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் மருத்துவ உபகரணங்கள் - அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்

தந்தைக்கும் நீதி கிடைத்தது... மகனும் நீதிபதியானார் - சாதித்து காட்டிய படுகொலையான முறப்பநாடு விஏஓ-வின் மகன்!

  • Share on