தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், EVERRENEW ENERGY நிறுவனத்தின் சார்பில், சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.2.5-லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், EVERRENEW ENERGY நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைவர் ராம்குமார், NTC இணை இயக்குனர் அருண்ராஜா, EVERRENEW ENERGY தளமேலாளர்கள் குணாளன், பாலகோகுலன், சமூகப்பொறுப்பு மேலாளர் அருண்வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜ், மருத்துவ அலுவலர் செல்வராசு, வட்டார சுகாதார புள்ளியலாளர் தீபக், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன்,
விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெத்தனாட்சி, தொழிலதிபர் பாஸ்கர், கிளைச் செயலாளர்கள் வீரபாண்டி, கருப்பசாமி, திமுக உறுப்பினர் பேச்சியப்பன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.