தூத்துக்குடி உப்பள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர், பெரியசாமி நகர், ராஜபாண்டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளங்கள் பணியாற்றக்கூடிய பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உரிய இட வசதி இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பெரியசாமி நகர் பகுதியில் சுமார் 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சுகாதார வளாகத்தை திறந்து வைத்தனர். மேலும் திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாத்து ஓடை முதல் முள்ளக்காடு வரை உள்ள சாலைகளில் புதிதாக ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் 56 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.