• vilasalnews@gmail.com

இராமச்சந்திராபுரம் கிராமத்தில் நடைபெறும் பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு!

  • Share on

இராமச்சந்திராபுரம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை கட்டிட பணி மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம், இராமச்சந்திராபுரத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டிட பணிகளையும், 15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்கள்.

அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கிளைச் செயலாளர்கள் கோசலைராமன், காந்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடிக்கு ஈஷா யோகா மைய ரத யாத்திரை வருகை

தூத்துக்குடி உப்பள பகுதியில் சுகாதார வளாகம் : கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!

  • Share on