• vilasalnews@gmail.com

மத்திய பாஜக அரசின் விவசாய விரோத போக்கிற்கு எதிராக தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

  • Share on

மத்திய பாஜக அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் பிப்ரவரி 16 காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இதனையடுத்து, விவசாயிகள் போராட்டம் என்பது தலைநகா் தில்லியோடு முடிவடைந்து விடாமல் அங்கே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. விவசாயிகள் பிரச்னை என்பது நாட்டிலுள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களின் நலனை உள்ளடக்கியதாகும். அதனால், அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவா்களும் தங்கள் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளோடு கலந்து பேசி ‘பாரத் பந்த்’ வெற்றிகரமாக தமிழகத்தில் நடைபெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவா்  கே.எஸ்.அழகிரியின் அறிவிப்பை தொடர்ந்து, 


தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் இன்று விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. விவசாயிகள் மீது நடத்திவரும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி போன்ற அராஜக செயல்களை அமல்படுத்தும் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். 


இந்த ஆர்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ராஜன், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்தோபர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல், ஊடகப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் சாமுவேல் ஞானதுரை, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்ண பாஸ் ,கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்டத் துணைத் தலைவர்கள் விஜயராஜ், ரஞ்சிதம் ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார், சீனிவாசன், அருணாசலம், சின்ன காளை, மைக்கேல் பிரபாகர், தனபால் ராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், ஜான்சன் ,குமார முருகேசன், காமாட்சி தனபால், நாராயணசாமி, ஐன்டியூசி தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி பிரீத்தி, சாந்தி, தெய்வ கனி, வார்டு தலைவர்கள் கிருஷ்ணன், மகாலிங்கம், முத்துராஜ், தனுஷ் , சித்திரை பால்ராஜ் , முத்துவேல், ஆரோக்கியம், தாமஸ், பெனிடிக் , இருதயராஜ், ஜேம்ஸ், சித்திரை குமார், பிராங்கிளின், ஜோசப் , ராஜரத்தினம், கனகராஜ், தனுஷ், கிருஷ்ணன், சிவன் யாதவ், ஜோபாய் பச்சேக், உலகநாதன், சுப்பிரமணியன், மகேந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டா காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்

  • Share on

புதியம்புத்தூரில் " இந்தியா வெல்வது நிச்சயம் " திமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடிக்கு ஈஷா யோகா மைய ரத யாத்திரை வருகை

  • Share on