• vilasalnews@gmail.com

பணம் சம்பாதிக்க விரும்பும் பெண்களா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வருகிற 17ம் தேதி வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் மகளிர் தொழில் முனைவோருக்கான தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் 105 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டம், ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. மேலும் தொழில் நிறுவன வளர்ச்சியின் அளவு பெரிதாக பெரிதாக தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது.

உதாரணமாக மார்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி தர நிலைப்படுத்துதல், தொழில் நுட்பம், எந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள் இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிர் தொழில் முனைவோருக்கு குறிப்பாக கிராமப்புற மகளிர் தொழில் முனைவோருக்கு கிடைப்பதில்லை. இந்த சிறப்பான சேவைகளை பெற பெண்கள் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேர்வான அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் சிறப்பு முகாம் 17-ந் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற உள்ளது. 

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கும் ஆர்வமும், யுக்தியும் திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்த கட்ட வளர்ச்சியை எதிர் நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இம்முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன் அவர்களை 9385299727, 8838110125, 9344175140 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது, 184, 2/5F, பாளையங்கோட்டை ரோடு மேற்கு, Yes வங்கி அருகில், வெற்றி வளாகம், தூத்துக்குடி - 628 008 என்ற வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட திட்ட மேலாண்மை அலகினை நேரிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகரில் 154.46 கோடி மதிப்பீட்டில் 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு... 4 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on